Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அயனில் வெளிநாட்டு ஸ்டண்ட் மாஸ்டர்!

Advertiesment
அயனில் வெளிநாட்டு ஸ்டண்ட் மாஸ்டர்!
, வியாழன், 31 ஜூலை 2008 (16:18 IST)
வெளிநாட்டு சண்டைக் கலை நிபுணர்களை தமிழ்ப் படத்தில் பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது.

தசாவதாரத்தில் ஒன்றுக்கு மூன்று சண்டைக் கலை நிபுணர்கள் பயன்படுத்தப்பட்டனர். சத்யம் படத்தில் பிரமாண்ட சேஸிங் காட்சி வருகிறது. இந்தக் காட்சியை வடிவமைத்ததும், படம் பிடித்ததும் வெளிநாட்டிலிருந்து வரவழைக்கப்பட்டவர்கள்.

விக்ரம் நடிக்கும் கந்தசாமி சண்டைக் காட்சிகள் வித்தியாசமான முறையில் படமாக்கப்பட்டு வருகிறது. படத்தில் மெக்சிகோ காளை சண்டையும் உண்டு. இதனை வெளிநாட்டு சண்டைக் கலை நிபுணர்களே வடிவமைக்கின்றனர்.

அயன் படத்துக்கு சண்டைக் காட்சி அமைப்பவர் கனல் கண்ணன். சமீபத்தில் ஆப்ரிக்காவில் சூர்யா வில்லன்களுடன் மோதும் காட்சி படமாக்கப்பட்டது. ரிஸ்க்கான இந்த சண்டைக் காட்சியை அமைக்க கனல் கண்ணனுக்கு உதவியவர் பிரான்ஸ். இவர் அந்நாட்டு சண்டைக் கலை நிபுணர்.

ஹாலிவுட் படங்கள் கடை கோடி கிராமம் வரை செல்வதால், தமிழ்ப் படங்களில் சண்டைக் காட்சிகளுக்கு அதிக கவனம் செலுத்துவது தவிர்க்க முடியாததாகிவிட்டது. வெளிநாட்டு சண்டைக் கலை நிபுணர்களை பயன்படுத்துவதற்கு இதுவே காரணம்!

Share this Story:

Follow Webdunia tamil