ஜெகன்ஜி இயக்கியிருக்கும் ராமன் தேடிய சீதையின் ஆடியோ வெளியீட்டு விழா சத்யம் காம்ப்ளக்சில் நடந்தது. முதல் இசைத் தட்டை ராம. நாராயணன் வெளியிட, தயாரிப்பாளர் தாணு பெற்றுக்கொண்டார்.
படத்தின கதை, கேரக்டர்கள் பற்றிய சிறிய புத்தகம் ஒன்றையும் விழாவில் வெளியிட்டனர். பாலுமகேந்திரா அதனை வெளியிட பாக்யராஜ் பெற்றுக் கொண்டார்.
விழாவில் நடிகர்கள் பிரகாஷ் ராஜ், பரத், சிபிராஜ், நிதின் சத்யா, ஜீவன் ஆகியோர் கலந்து கொண்டனர். இளம் இயக்குனர்களில் சீமான், கரு. பழனியப்பன், ராதாமோகன், சசி, வசந்த் ஆகியோரை விழாவில் காண முடிந்தது.
இசையமைப்பாளர் வித்யாசாகரும் விழாவில் கலந்துகொண்டனர்.