குசேலன் ரிலீசை முன்னிட்டு அமெரிக்காவில் படம் வெளியாகும் திரையரங்குகளின் முன் ரஜினியின் 25 அடி உயரக் கட்-அவுட்டை வைத்தவர்கள், அடுத்த அதிரடியாக, ஜூலை 25 ஆம் தேதி குசேலன் ஸ்பெசல் ஷோவை அமெரிக்காவில் நடத்துகிறார்கள்.
நட்பைப் பற்றிய படம் என்பதால், நட்பு பற்றி சுவாரஸியமான வாசகம் எழுதுகிறவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்படுகிறதாம்.
அமெரிக்காவில் ஒரு நடிகரின் படத்திற்கு இத்தனை கோலாகலங்கள் இதுவே முதல் முறை. தசாவதாரம் வெளியானபோது கமல் ரசிகர்கள் பத்துவிதமான தோசைகள் செய்து உணவுத் திருவிழா நடத்தியது நினைவிருக்கும். அதற்கு எந்தவிதத்திலும் சளைக்காத விதத்தில் குசேலன் கொண்டாட்டங்கள் நடந்து வருகின்றன.
ஜூலை 25 திருப்பதி பீமாஸ் ரெஸ்டாரண்டில் குசேலன் ஸ்பேஷல் ஷோ நடத்தப்படுகிறது.