பில்லாவில் டூ பீஸில் வந்தபோது இத்தனை சர்ச்சையில்லை. சத்யம் படத்தில் பாடல் காட்சியொன்றில் நயன்தாரா காட்டியிருக்கும் கவர்ச்சி, சக நடிகர்களுக்குள்ளேயே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று பத்திரிக்கையாளர்களை சந்தித்த படத்தின் இயக்குனர் ராஜசேகரிடம் கேட்கப்பட்டவற்றில் நயன்தாரா குறித்த கேள்விகளே அதிகம்.
நயன்தாராவை வற்புறுத்தி நடிக்க வைக்கவில்லை. கதையை சொல்லும்போதே, அந்த பாடல் காட்சி பற்றி கூறினோம். அவருக்கு உடன்பாடில்லாமல் எந்தக் காட்சியிலும் நடிக்க வைக்க முடியாது என்றார் ராஜசேகர்.
மூன்று கோடி பட்ஜெட்டில் தொடங்கிய படத்திற்கு 23 கோடி செலவு செய்திருப்பதாக அவர் மேலும் கூறினார். (பட்ஜெட்டே சரியாக போடாதவர் எப்படி படத்தை எடுத்திருப்பார்?)
உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் படத்தின் ஆடியோவை பிரமாண்டமாக வெளியிடுவதாகக் கூறியவர்கள், கூட்டத்தையே சேர்க்காமல் சத்தமில்லாமல் வெளியிட்டிருக்கிறார்கள்.
சிக்கன நடவடிக்கை?