கருணாஸை காமெடியனாக மட்டுமே பலருக்கும் தெரியும். அவருக்குள் ஒரு கருணைக் கடல் இருப்பது அருகிலிருப்பவர் மட்டுமே அறிந்த ரகசியம்.
திண்டுக்கல் சாரதி படப்பிடிப்புக்காக வெளியூர் சென்றபோது வெள்ளந்தி மனிதர் ஒருவர் மகளின் மார்க்ஷீட்டுடன் கருணாசை சந்தித்திருக்கிறார். நல்ல மதிப்பெண்கள் எடுத்திருந்தும் மகளை ஆசிரியர் பயிற்சியில் சேர்க்க முடியாத பணமுடை அந்த மனிதருக்கு. அந்த இடத்திலேயே ஐம்பதாயிரம் ரூபாய் கொடுத்து படிப்புக்கு உதவியிருக்கிறார் கருணாஸ்.
ராமனாதபுரம் மாவட்டத்தில் நூறு ஏக்கர் நிலம் வாங்க இவர் அட்வான்ஸ் கொடுத்துள்ளார். கட்சி தொடங்கவோ, கல்யாண மண்டபம் கட்டவோ இல்லை இந்த இடம். ஆசியாவிலேயே பெரிய முதியோர் இல்லம் இங்கு அமையப் போகிறது.
முதியோர் இல்லம் கருணாசின் கனவு. சம்பாதித்தது அனைத்தையும் செலவழித்து நூறு ஏக்கரில் தனது கனவை கட்டியெழுப்ப உள்ளாராம். இதனை கேள்விப் பட்டதும் ஐம்பதாயிரம் ரூபாய் நன்கொடை கொடுத்து, கருணாஸின் முயற்சிக்கு கை கொடுத்துள்ளார் லாரன்ஸ்.
மேக்கப்பிற்குள்ளும் மனிதர்கள் இருக்கவே செய்கிறார்கள்.