ஷெரீனுக்கு இது சோதனைகளின் காலம். தெற்றுப் பற்களை சீராக்கி மனம் நிறைய கனவுகளுடன் உற்சாகம் படத்தில் நடித்தார். பை நிறைய படங்கள் வரவேண்டாம். கை நிறையயாவது வர வேண்டுமே? ஏமாற்றம்... படுஏமாற்றம்!
கிடைத்த வில் படம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. ஆசையோடு கால்ஷீட் கொடுத்த அகம் புறமிலிருந்து புறந்தள்ளப்பட்டுள்ளார். இத்தனைக்கும் ஷாம், ஷெரீனை வைத்து பிரமாண்டமாக ஃபோட்டோசெஷன் எல்லாம் எடுத்தார் படத்தின் தயாரிப்பாளர் திருமலை. இப்போது ஷெரீனுக்கு பதில் நடிப்பது கீரத்.
அர்ஜுனின் துரையிலும் பத்மப்ரியாவுக்குப் பதிலாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதும் கீரத்தே!
ரீபிளேசிங் ஹீரோயின்?