பிப்ரவரி 14, சுள்ளான், கஜினி, சபரி படங்களை தயாரித்த சேலம் சந்திரசேகரை நினைவிருக்கிறதா? கஜினி தவிர தயாரித்த மூன்று படங்களுமே காலைவார தயாரிப்பிலிருந்தே சிறிது காலம் விலகி இருந்தார். ஆரவாரமாக தொடங்கப்பட்ட கில்லாடி படமும் பைனான்ஸ் சிக்கல்களால் பாதியிலேயே நின்று போக, மொத்தமாக நிறுத்தத்திற்கு வந்தார் சந்திரசேகரன்.
கில்லாடிக்கு நடிகர் பரத் அவ்வப்போது கால்ஷீட் கொடுத்தும் படம் முன்னுக்கு நகரவில்லை. படத்தின் இயக்குனர் ஏ.வெங்கடேஷ் வேறு படங்களில் பிஸியாக, கில்லாடி கிடப்பில் போடப்பட்டது.
சிறிய இடைவெளிக்குப்பின் கடன்களிலிருந்து மீண்டு வந்துள்ளார் சந்திரசேகரன். கில்லாடியை எப்படியும் முடிப்பது என்ற முயற்சியில் இருப்பவருக்கு கைகொடுத்துள்ளார் பரத்.
சேவல், ஆறுமுகம், திருத்தணி என அடுத்தடுத்தப் படங்களுக்கு நடுவில் கில்லாடிக்கும் கால்ஷீட் கொடுக்க முன்வந்துள்ளார் பரத்.
அவரின் பரந்த மனசால் கில்லாடி இனி தள்ளாடாது என நம்பலாம்!