Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பந்தயத்தில் அப்பா ஜெயிப்பார் - விஜய்!

Advertiesment
பந்தயத்தில் அப்பா ஜெயிப்பார் - விஜய்!
, திங்கள், 14 ஜூலை 2008 (20:32 IST)
இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் வி.வி. கிரியேஷன்ஸ் சார்பில் தயாரித்து இயக்கும் படம் பந்தயம். நிதின் சந்தியா, சிந்து துலானி நடிக்கும் இப்படத்தின் வெளியிட ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடந்தது.

ட்ரெய்லரை விஜய் வெளியிட சிம்ரன் பெற்றுக்கொண்டார். இந்த விழாவில் பேசிய விஜய், "பந்தயத்தின் கதையை அப்பா என்னிடம் சொன்னார். அதில் திருப்பாச்சி, சிவகாசி படத்தின் வேகத்தை என்னால் உணர முடிந்தது. என்னிடம் தேதிகள் இருந்தால் நானே நடித்திருக்கும் அளவிற்கு கதையின் வேகம் அமைந்திருந்தது. எல்லோரும் சேர்ந்து ஓடும் இப்பந்தயத்தில் அப்பா ஜெயிப்பார்" என்று குறிப்பிட்டார்.

விழாவில் படத்தின் நாயகன், நாயகி, இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி, ஒளிப்பதிவாளர் ஸ்ரீனிவாஸ் தேவாம்சம், தயாரிப்பாளர்கள் ஏவி.எம். சரவணன், காஜாமைதீன், மோகன் நடராஜன், கலைப்புலி தானு ஆகியோர் கலந்துகொண்டனர்.

விஜயின் மனைவி சங்கீதா விழாவினை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். "ஜெயிப்பது நிஜம்" எனும் குழக்கத்தோடு வெளிவரப்போகும் 'பந்தயம்' ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil