எம்ஜி.ஆரின் கார் நம்பரான டி.எம்.எக்ஸ் 4777 நம்பரைத்தான் தலைப்பாக வைக்க நினைத்தாராம் இயக்குநர் லட்சுமிகாந்தன். அதில் 4777 என்ற நம்பரை மட்டும் எடுத்து தயாரிப்பாளர் உருவாக்கியுள்ள தலைப்புத்தான் த நா 07 அல 4777.
பணக்காரர்கள் மட்டுமே இருக்கனும் என்று நினைக்கிற ஒருத்தனும், பணக்காரர்களே நம் நாட்டில் இருக்கக் கூடாது என்று நினைக்கிற ஒருத்தனும் சந்தித்தா என்ன நடக்கும் என்பது கதை. இந்த இருவரில் ஒருவரான பசுபதியும். மற்றொருவராக அஞ்சாதே அஜ்மலும் நடிக்கின்றனர்.
படம் முழுக்க பசுபதிதான். அவ்வளவு அற்புதமான நடிப்பு. பசுபதியை போலீஸ் துரத்துர காட்சியை ஐந்து நாட்கள் எடுத்தோம் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் என்று பூரிக்கிறார் லட்சுமிகாந்தன்.