சேரனின் பொக்கிஷம் கோபிச்செட்டிபாளையத்தில் தொடங்கி வளர்கிறது. மலரும் நினைவுகளாக தனது வாழ்க்கையை திரும்பிப் பார்க்கும் நாயகனின் நினைவுதான் கதை. ஆட்டோ கிராஃபின் இரண்டாம் பாகமாக பொக்கிஷத்தை பார்த்துப் பார்த்து எடுக்கிறார் சேரன்.
பத்மப்ரியாவும் கண்ணும் கண்ணும் கதாநாயகி உதயதாராவும் சேரனின் நாயகிகளாக நடிக்கிறார்கள். இந்தக் கேரக்டரில் நடிக்க வைக்கத்தான் ஸ்னேகாவுடனும் ஜோதிகாவுடனும் மன்றாடிப் பார்த்தார் சேரன். இருவரும் மறுத்து விட்டனர்.
பல வெற்றிப் படங்களைத் தந்த நேமிசந்த் ஜெபக், ஹித்தேஷ் படத்தைத் தயாரிக்கிறார்கள். ஆட்டோகிராஃப் இரண்டாம் பாகம் அறிவிக்கப்பட்டு வெகுநாட்களுக்கு பிறகு இப்போதுதான் கோபியில் துவக்கவிழா கண்டுள்ளது.