ஏற்கனவே பிரசாந்த்-பூஜாவை வைத்து 'தகப்பன்சாமி' என்ற பெயரில் படம் எடுத்தவர் திருச்சி கோபால்ஜி. இவர்தான் திருமலை கிரியேஷன்ஸ் சார்பில் மீண்டும் படம் தயாரிக்கத் திட்டமிட்டிருக்கிறார். 'உச்சக்கட்டம்' என்ற பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.
பிரபலமான நாயகன், நாயகி நடிக்கவுள்ள இப்படத்தின் பூஜை விரைவில் போடப்படுகிறது. ஏற்கனவே 'காதலே சுவாசம்' என்ற படத்திற்கு இசையமைத்த மெல்வின் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.
படத்தின் இயக்குனர் நவீன். இயக்குனர் கே.எஸ். ரவிக்குமாரிடம் பல படங்களுக்கு துணை இயக்குனராக இருந்தவர். அதுமட்டுமல்லாமல் பல குறும்படங்களும், விளம்பரப் படங்களும் எடுத்து அனுபவம் பெற்றவர்.
கே.எஸ். ரவிக்குமாரின் உதவியாளர்கள் இயக்குனர் சேரனைத் தவிர வேறு யாரும் பிரகாசிக்காத நிலையில் இவர் நிச்சயம் பெரிய அளவில் பேசப்பட வாழ்த்துவோம். ஜமாய்ங்க நவீன். உங்க குரு மாதிரி கமர்ஷியல்ல கலக்குங்க.