Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஐந்து ரீ-மிக்ஸ் ஆறு ஹீரோயின்கள்!

Advertiesment
ஐந்து ரீ-மிக்ஸ் ஆறு ஹீரோயின்கள்!
, வெள்ளி, 4 ஜூலை 2008 (20:09 IST)
ஒரு படத்துக்கு ஒரு ஹீரோயினே அதிகம். ராஜாதிராஜாவில் ஆறு ஹீரோயின்கள். அஜீரண‌‌க் கோளாறு ஏற்படக் போகிறது என நினைக்கும் வேளையில், அதிரடியாக இன்னொரு செய்தி. படத்தில் இடம்பெறும் அனைத்துப் பாடல்களும் ரீ-மிக்ஸாம்!

ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் லாரன்ஸ் நடிக்கும் ராஜாதிராஜா சேதிகளைத்தான் முதல் பாராவில் நீங்கள் படித்தது. கிரண், மும்தாஜ், சமிக்சா, மீனாட்சி, காம்னா ஆகியோர் இதுவரை ஒப்பந்தமாகியுள்ளனர். இன்னொரு நாயகி அனேகமாக பூஜாவாக இருக்கலாம்.

ரீ-மிக்ஸே கூடாது என புலமைப்பித்தன் மாதிரியானர்கள் ஒரு பக்கம் மீசை முறுக்க, அட போங்கப்பா என்பதுபோல் ராஜாதிராஜவில் ஐந்து ரீ-மிக்ஸ். எந்தெந்த பாடலை மிக்ஸ் பண்ணலாம் என ஷக்தி சிதம்பரம் அலுவலகத்தில் சின்ன தேர்தலே நடக்கிறது.

ஐந்து ரீ-மிக்ஸ், ஆறு ஹீரோயின்கள். இதற்கு நடுவில் எப்படி கோர்க்கப் போகிறார்கள் கதையை?

Share this Story:

Follow Webdunia tamil