Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பசுபதியை டென்ஷனாக்கிய குசேலன் போஸ்டர்!

Advertiesment
பசுபதியை டென்ஷனாக்கிய குசேலன் போஸ்டர்!
, வியாழன், 3 ஜூலை 2008 (15:45 IST)
வீட்டுக்குத் தலைவன் என்று கூறிவிட்டு ரேஷன் கார்டில் பெயரைக் கூட போடவில்லையென்றால்...? அப்படியொரு கோப மனநிலையில் இருக்கிறார் பசுபதி.

குசேலன் தொடக்க விழாவில், படத்தில் என்னுடைய பங்கு 25 சதவீதம். பசுபதியின் பங்கு 50 சதவீதம். மீதம் 25 வடிவேலு என்றார் ரஜினிகாந்த். தொடங்கும்போது இருந்த இந்த தாராளம் முடியும்போது ஆவியாகிவிட்டது.

குசேலன் செய்தி தொடங்கி போஸ்டர் வரை எங்கும் எதிலும் ரஜினி மயம். ஸ்டாம்ப் சைஸில் கூட பசுபதியின் படத்தை பிரசுரிக்கவில்லை. இதில் கடுப்பான பசுபதி உள்ளூரில் இருந்தும் குசேலன் ஆடியோ வெளியீட்டு வீழாவில் கலந்துகொள்ளவில்லை.

பிஸினஸ் ரஜினியை வைத்து என்பதால் தயாரிப்பாளர்களும் சரி, இயக்குனர் பி. வாசுவும் சரி, இந்தப் புறக்கணிப்பை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை என்பதுடன் பசுபதியின் பெயர் தங்கள் பேச்சில் இடம்பெறாமல் கவனமாக பார்த்துக் கொண்டார்கள்.

யானைக்கு வாலாக இருப்பதைவிட எலிக்கு தலையாக இருப்பதன் முக்கியத்துவம் பசுபதிக்கு இப்போது புரிந்திருக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil