வெயில் படத்துக்கு சிறந்த மாநில மொழி திரைப்படத்துக்கான தேசிய விருது கிடைத்ததில் மகிழ்ந்து போயுள்ளார் வசந்தபாலன்.
அந்த மகிழ்ச்சியின் அளவு குறையும்முன் அதைவிட இன்ப அதிர்ச்சியான இன்னொரு நிகழ்வு.
பண்டிட் குயின் படத்தை தயாரித்த நிறுவனம் ஆங்கில படமொன்றை தயாரிக்கிறது. படத்திற்கு யாரை இயக்குனராகப் போடலாம் என சலித்ததில் கடைசியாக தேசியது நம்மூர் வசந்தபாலனின் பெயராம்.
அங்காடித்தெருவை இயக்கிவரும் வசந்தபாலனும் இந்த அரிய வாய்ப்பை ஒப்புக்கொண்டிருக்கிறார். முதல்கட்ட பேச்சுவார்த்தை முடிந்து படத்துக்கு ரஃப் இண்டியன் என பெயரும் வைத்துள்ளனர்.
கலக்குங்க வசந்தபாலன்!