Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எடை குறைக்க வெளிநாடு செல்லும் நடிகர்!

Advertiesment
எடை குறைக்க வெளிநாடு செல்லும் நடிகர்!
, செவ்வாய், 1 ஜூலை 2008 (18:59 IST)
உணவை குறைத்து உடற்பயிற்சியை முடுக்கினால் எந்த உடம்பும் ஐஸாக உருகிவிடும். இது நமக்குத் தெரிந்த வைத்தியம். மாதவன் பாணி வேறு. உடம்பை குறைக்க வேண்டுமா? உடனடியாக வெளிநாட்டுக்கு டிக்கெட் வாங்கிவிடுவார்.

என்றென்றும் புன்னகையில் ஸ்ருதி ஜோடியாக நடிக்க வாய்ப்பு வந்ததும் லண்டன் பறந்தார் மாதவன். படத்தில் ஸ்ருதிக்கு அண்ணனாக தெரியக்கூடாது என்பதற்காக உடம்பைக் குறைக்கவே இந்தப் பயணம். படம் கைவிடப்பட்டதோடு மாதவனின் உடம்பும் பரபரவென உப்பிவிட்டது.

ராஜ்குமார் ஹிரானியின் இடியட் படத்தில் அமீர் கானுடன் நடிக்கிறார் மாதவன். கல்லூரி மாணவன் வேடம். மாதவனின் இப்போதைய உடம்புக்கு கல்லூரி பேராசிரியர் ரோல்தான் சரியாக இருக்கும். மாணவனாக வேண்டுமென்றால், பத்து பதினைந்து கிலோ கம்மியாக வேண்டும்.

ஹிரானி உடம்பை குறைக்கச் சொன்னதால் விரைவில் சுவிட்சர்லாந்த் செல்கிறார். உள்ளூரில் இருந்தால், உடம்பைப் குறைப்பதில் அக்கறை இருக்காது என்பதால்தான் வெளிநாடு செல்கிறாராம்.

மாதவனை யாராவது அண்டார்டிகா அனுப்பினால் அக்கறை அதிகமாகி குழந்தையாகி திரும்பினாலும் திரும்புவார்.

Share this Story:

Follow Webdunia tamil