மாளவிகா விவகாரத்தில் நேற்று காலை பஞ்சாயத்து. மாளவிகா மும்பையில் இருப்பதால் நடிகர் சங்கத் தலைவங்ர சரத்குமாரும், பொதுச் செயலர் ராதாரவியும் தொலைபேசியில் அவரைத் தொடர்பு கொண்டு பேசினர்.
கார்த்தீகையில் இனி பதினைந்து நாட்கள் நடித்துக்கொடுக்க வேண்டும். இதனைப் பத்து நாட்களாகக் குறைக்க இயக்குநர் வீரா சம்மதித்திருப்பதை மாளவிகாவிடம் சரத்குமார் தெரிவித்தார். பத்து நாட்கள் நடிப்பதற்கும் உடன்படவில்லை மாளவிகா. கணவர் ஓய்வெடுக்கச் சொல்லியிருக்கிறார், அதனால் நடிக்க முடியாது என்றிருக்கிறார் இறுதியாக.
சமரச முயற்சி தோல்வியடைந்து விட்டதால், அவர்மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுத்துக்கொள்ளுங்கள் என்று கார்த்தீகை தயாரிப்பாளரிடம் சொல்லிவிட்டது நடிகர் சங்கம்.
இதனைத் தொடர்ந்து மாளவிகா மீது 75 லட்சம் நஷ்ட ஈடு கேட்டு வழக்குத் தொடரப் போவதாக உறுதி செய்தார் இயக்குநர் வீரா.