சென்னை 600028 -ல் நடித்த ஜெய்க்கு படங்கள் குவிகின்றன. இவர் நடிப்பில் சசிக்குமார் இயக்கிய சுப்பிரமணியபுரம் ஜூலை முதல் வாரத்தில் வெளியாகிறது.
மோசர் பேர் நிறுவனம் மீரா கதிரவன் இயக்கத்தில் தயாரிக்கும் படம் என் பெயர் தமிழரசி. இதில் நவ்யா நாயர் நாயகியாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் ஜெய்.
பாலசந்தரின் உதவியாளர் தாமிரா, எஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் ரெட்டச்சுழி படத்தை இயக்குகிறார். பாரதிராஜா, பாலசந்தர் நடிக்கவிருக்கும் இப்படத்திலும் ஜெய் ஒப்பந்தமாகியுள்ளார்.
மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பில் புஷ்கர்- காயத்ரி இயக்கும் ராக்கோழி படத்திலும் ஜெய்தான் ஹீரோ.
குறைவான சம்பளமும் நிறைவான நடிப்பும்தான் தயாரிப்பாளர்களையும் இயக்குநர்களையும் ஜெய்யை நோக்கி ஓட வைக்கின்றன.