வாஹினி ஸ்டுடியோ பி.நாகி ரெட்டியின் மகன் விஸ்வநாத ரெட்டி தயாரிக்கும் படத்தில் நடிக்கிறார் ஷக்தி. மேலோட்டமாகப் பார்த்தால் சாதாரணமாகத் தெரியும். இந்தச் செய்திக்குப் பின்னால் மூன்று தலைமுறை சரித்திரம் இருக்கிறது.
பி.நாகி ரெட்டி எம்.ஜி.ஆரை வைத்து எங்க வீட்டுப் பிள்ளையைத் தயாரித்த போது, இயக்குநர் பி.வாசுவின் தந்தை பீதாம்பரம் அப்படத்தில் மேக்கப் மேனாகப் பணி புரிந்தார்.
பிறகு அவரது மகன் விஸ்வநாத ரெட்டி தயாரித்த உழைப்பாளியை பி.வாசு இயக்கினார். இப்போது வாசுவின் மகன் ஷக்தி விஸ்வநாத ரெட்டியின் தயாரிப்பில் நடிக்கிறார்.
ஆக, மூன்று தலைமுறை ஒரே பட நிறுவனத்திடம் பணி புரிந்திருக்கிறது. நிலையாமை நிரம்பிய சினிமாவில் இது அரிதான நிகழ்வு.