மலேசியா, சிங்கப்பூர் ஆகிய இரு நாடுகளிலும் சத்யம் படத்தின் ஆடியோவை ஸ்பெஷலாக வெளியிடத் திட்டமிட்டுள்ளார், படத்தின் தயாரிப்பாளர் விக்ரம் கிருஷ்ணா. இதற்குப் பின்னால் இருப்பவர் ஹாரிஸ் ஜெயராஜ்.
சத்யம், ஹாரிஸின் 25ஆவது படமாம். அதனால் சத்யத்தின் இசை வெளியீட்டை, ஹாரிஸைப் பெருமைப்படுத்தும் விதத்தில் பிரமாண்டமாக நடத்த வேண்டும் என்பது விக்ரம் கிருஷ்ணாவின் விருப்பம்.
சென்னை மற்றும் ஹைதராபாத்தில் படத்தின் ஆடியோவை வெளியிட்ட பிறகு ஹாரிஸின் வெளிநாட்டு ரசிகர்களைக் குஷிப்படுத்த மலேசியா, சிங்கப்பூரில் ஸ்பெஷலாக விழா எடுத்து வெளியிடுகின்றனர்.
இசையமைப்பாளரைப் பெருமைப்படுத்தும் அதேநேரம் படத்துக்கு நல்ல விளம்பரம். ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.