தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் முதல் வெற்றியைச் சுவைத்துள்ளது கேயார் தலைமையிலான முற்போக்கு அணி.
தமிழைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள் மட்டுமே தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் போட்டியிடலாம் என்ற புதிய விதி முறையை, ராம.நாராயணன் தலைமையிலான இப்போதைய நிர்வாகிகள் கொண்டு வந்தனர். இதன்படி இவர்களின் எதிர் அணியில் உள்ள கேயார், ஏ.எம்.ரத்னம் போன்றவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது.
இந்த விதிமுறையை எதிர்த்தும், தேர்தல் அதிகாரி முருகனை மாற்றக் கோரியும் கேயாரின் முற்போக்கு அணி சார்பில் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இதனை விசாரித்த நீதிபதி, புதிய விதிமுறைக்குத் தடை விதித்ததுடன், முருகனை மாற்றிவிட்டு உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஒருவரைப் புதிய தேர்தல் அதிகாரியாக நியமிப்பதாகவும் தீர்ப்பளித்தார்.
சாதகமான தீர்ப்பால் இறுதி வெற்றியும் எங்களுக்கே என்று களித்திருக்கிறது கேயார் அணி.