சூப்பர் ஸ்டாரும், பேரரசுவும் தான் பஞ்ச் டயலாக் பேசலாமா. முதன் முறையாக பஞ்ச் டயலாக் பேசி அசத்தியுள்ளார் நயன்தாரா.
சத்யம் படத்தில் செய்தி வாசிக்கும் தெய்வலட்சுமி கேரக்டரில் நடிக்கிறார் நயன்தாரா. இவர் குடியிருக்கும் வீட்டைச் சுற்றி ஏகப்பட்ட பொடிசுகள். அவர்களுடன் குழந்தையாக மாறி இந்த டீன் ஏஜ் குழந்தை அடிக்கும் கொட்டம் டாப்பாக இருக்குமாம்.
ஜாலியான இந்த கதாபாத்திரம் அடிக்கடி சில பன்ஞ் டயலாக்கும் உதிர்க்கும். சாம்பிளுக்கு...
'சூப்பர் ஸ்டார்னா மாஸ்
தெய்வானா நியூஸ்
கேட்டா கொடுப்பது தெய்வம்
கேட்காம கொடுக்கிறது தெய்வா'
வில்லன்களைப் பார்த்து ஹீரோ தொடையை தட்டி வீர வசனம் இல்லை என்பதாலும், பேசுவது நயன்தாரா என்பதாலும் சந்தோஷமாக சகித்துக் கொள்ளலாம்.