கடந்த பத்து நாட்களாக பழனியில் வில்லு படிப்பிடிப்பு. பிரபுதேவா, விஜய் எல்லாம் பழனியில்தான் தங்கியிருந்தனர்.
தமிழ்நாட்டிற்கே உள்ள தசாவதாரம் ஃபீவர் வில்லு டீமிற்கும். இதற்காகச் சென்னை வர முடியுமா? பழனியிலேயே தசாவதாரம் ஓடிய திரையரங்கில் மொத்தமாகச் சென்று பார்த்தார்களாம்.
படம் பிரமாதம், பிரமாண்டம் என்றிருக்கிறார் பிரபுதேவா. விஜய்? எப்படியும் ஆறு மாதத்திற்குள் அபிப்ராயத்தைச் சொல்லி விடுவார்.
தசாவதாரம் பார்த்ததுடன் அப்படியே காரைக்குடிக்கு ஷிப்டாகியுள்ளனர். இங்கு விஜய் வில்லன்களுடன் மோதும் சண்டைக் காட்சியை எடுக்கிறார் பிரபு தேவா.