தமிழா, இந்தியா,,, இழுபறியில் இருந்த ஸ்ருதிகமலின் திரைப்பிரவேசத்துக்கு முடிவு தெரிந்திருக்கிறது.
அப்பா அம்மா இருவரும் நடிகர்கள் என்றாலும் ஸ்ருதியின் ப்ரியம் இசை. அமெரிக்கா சென்று இசை குறித்துப் படித்தவர், சென்னை திரும்பியதும் இசை ஆல்பம் தயாரிப்பதில் முனைந்தார்.
ஆனால், நடிப்புப் பாரம்பரியம் சும்மா விடுமா?
வெள்ளமாக வந்த வாய்ப்புகளில் ஸ்ருதி தேர்ந்தெடுத்தது என்றென்றும் புன்னகை. ஹீரோ மாதவன், இயக்கம் நிஷிகாந்த். துரதிர்ஷ்டவசமாக கதை, இயக்குனர் என ஒவ்வொன்றாக மாற, உஷாராக படத்திலிருந்து விலகிக் கொண்டார் ஸ்ருதி.
இந்நிலையில் கால் பட இயக்குனர் சோஹம் ஷா விடமிருந்து அழைப்பு வர கதை கேட்டு உடனே ஒப்புக் கொண்டிருக்கிறார். இவர்கள் தவிர அனில் கபூர், சஞ்சய் தத், துஷார் கபூர் என ஒரு மெகா டீமே இருக்கிறது. முன்னணி ஹீரோயின்களும் உண்டு. ஆனால் முக்கியத்துவம் ஸ்ருதிக்குதானாம்.
ஸ்ருதி விஷயத்தில் தமிழ் பிந்த, இந்தி முந்தியிருக்கிறது!