ஒரிஜினல் எது? ரீ-மிக்ஸ் எது? இன்னும் சில வருடங்களில் இந்தக் குழப்பம் வரத்தான் போகிறது. படத்துக்கு ஒரு ரீ-மிக்ஸ் என்பதில் கோடம்பாக்கம் குறியாக இருந்தால் குளறுபடி தவிர்க்க முடியாதது தானே!
ஸ்ரீகாந்த், நவ்யா நாயர் நடிக்கும் எட்டப்பன் படத்திலும் இடம் பெறுகிறது ரீ-மிக்ஸ் பாடலொன்று. பராசக்தியில் வரும் ஓ ரசிக சீமானே பாடலை இதற்கென தேர்ந்தெடுத்து, தன்னிஷ்டப்படி இசையமைத்தும் விட்டார் விஜய் ஆண்டனி. பாடலைக் கேட்ட இயக்குனர் வித்யாதரன் பரவசமாகி, எட்டப்பன் பெயரை தூக்கிவிட்டு படத்தின் பெயரையே, ரசிக் சீமானே என மாற்றி விட்டார்.
எட்டப்பன் பெயருக்கு ஏற்கனவே வம்படி நடந்து கொண்டிருக்கிறது. எங்கள் வம்சத்தை இழிவபடுத்துகிறது என எட்டப்பன் வாரிசு ஒருவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
பெயரை மாற்றியதோடு பிரச்சனையும் முடிவுக்கு வந்துள்ளது.