தமிழ் நடிகையான ப்ரியாமணிக்கு 2006 ஆம் ஆண்டு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்துள்ளது.
2006ஆம் ஆண்டுக்கான 54வது தேசிய விருதை மத்திய அரசு இன்று அறிவித்தது. இதில் சிறந்த நடிகையாக ப்ரியாமணி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பருத்திவீரன் படத்தில் சிறப்பாக நடித்தற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இயக்குனர் பாரதிராஜாவால் 'கண்கனால் கைது செய்' என்ற படம் மூலம் அறிமுகம் செய்யப்பட்டவர் நடிகை ப்ரியாமணி. இவர் தமிழில் அது ஒரு கனாகாலம், பருத்திவீரன், மலைக்கோட்டை உள்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.
இயக்குனர் அமீர் இயக்கிய பருத்திவீரன் படம் மாபெரும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.