மகிழ்ச்சியிலும் நெகிழ்ச்சியிலும் கரைந்து போயிருக்கிறார் ராகவா லாரன்ஸ். ஆதரவற்ற ஏழைகளுக்கு அன்புகாட்டும் கூடாரமாக மாறியிருக்கிறது லாரன்சின் வீடு.
பாண்டி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் 36 ஏழைக் குழந்தைகளின் இருதய அறுவை சிகிச்சைக்கு நிதி தாருங்கள் என கையேந்தினார் லாரன்ஸ். நாலா திசைகளிலிருந்தும் உதவிகள் குவிய இரண்டு குழந்தைகளின் அறுவை சிகிச்சைககள் வெற்றிகரமாக நடந்தன.
லாரன்சின் கோரிக்கையை அறிந்து கொண்ட மத்திய அமைச்சர் அன்புமணி லாரன்ஸை அழைத்து விவரங்களை கேட்டறிந்தார். அத்துடன் மீதி உள்ள 34 குழந்தைகளின் இருதய அறுவை சிகிச்சைக்கான செலவுகளை ஏற்றுக் கொள்வதாக தெரிவித்தார்.
அமைச்சரின் ஆதரவு கரத்தால் அறுவை சிகிச்சைகள் ஒவ்வொன்றாக நடந்து வருகின்றன. முயற்சி திருவினையான நெகிழ்ச்சியில் தனது நற்பணிகளின் எல்லையை விஸ்தரிக்கப் போவதாக உற்சாகமாகக் கூறினார் லாரன்ஸ்.