தனது அடுத்த படத்திற்கான கதையை தனது லேப்டாப்பில் பதிவு செய்து விட்டார் கமல். தயாரித்து இயக்கி நடிக்கப்போவது அவரே. மர்மயோகி என்ற அந்தச் சரித்திரக் கால சப்ஜெக்டின் உத்தேச பட்ஜெட் நூறு கோடியாம்.
ராஜ்கமல் ஃபிலிம்ஸ் மட்டுமே இத்தனை கோடிகளைச் செலவழிக்க முடியாது என்பதால், கோடிகளைப் பொருட்படுத்தாத கார்ப்பரேட் கம்பெனிகளாகத் தேடி வருகிறார் கமல்.
ராஜ்கல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் கமல் நடித்த எல்லாப் படங்களுக்கும் இசையமைத்தவர் இளையராஜா. விருமாண்டி வரை இதுதான் நடைமுறை.
முதன்முறையாக இளையராஜாவைத் தவிர்த்து மர்மயோகியில் ஏ.ஆர்.ரஹ்மானை ஒப்பந்தம் செய்துள்ளார் கமல். படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மும்மொழிகளில் தயாரவதால் இந்த மாற்றமாம்.
பைனான்ஸ் தயாராகாத நிலையில் நட்சத்திரத் தேர்வில் ஆர்வம் காட்டுகிறார் கமல். ஏற்கெனவே மர்மயோகியில் நடிக்க ஹேமமாலினி சம்மதம் தெரிவித்துள்ள நிலையில், கமல் ஜோடியாக நடிக்கக் கஜோலைக் கேட்டுள்ளனர்.
கமலின் சாட்சி 420 படத்தில் கஜோல் நடிக்க மறுத்ததால் இறுதியில் தபு ஒப்பந்தம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.