Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காதலர்களுக்கான 'காதல் ஓசை' பாடல்கள்!

காதலர்களுக்கான 'காதல் ஓசை' பாடல்கள்!
, திங்கள், 2 ஜூன் 2008 (19:51 IST)
பாவனா ஸ்ரீ கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிக்கப்பட்டு வரும் படம் 'காதல் ஓசை'. இப்படத்தில் நாயகன்- நாயகியாக ரித்திக், ராகி அகிய புதுமுகங்கள் அறிமுகமாகியுள்ளனர்.

முழுமையாக படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் இதன் பாடல் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. சிறப்புடன் நடைபெற்ற இவ்விழாவுக்கு திரைப்பட விநியோகஸ்தர் சங்கத் தலைவர் கலைப்புலி சேகரன் தலைமை தாங்கினார். பாடல் கேசட்டை அமீர் வெளியிட, நடிகை கீர்த்தி சாவ்லா பெற்றுக்கொண்டார்.

மனிஷ் கே இசையில் பாடல்கள் அனைத்தும் நன்றாக வந்திருப்பதாக அனைவரும் பாராட்டிப் பேசினார்கள். இயக்குனர் அமீர் பேசும்போது, இனி தமிழ் சினிமாக்களும் உலகத் தரத்திற்கு உயர்ந்து நிற்கப் போகிற அளவுக்கு அதன் பிரமாண்டங்கள் அசத்தும்படி உள்ளது. அத்துடன் எடுக்கும் விதமும் மிரட்டும்படி உள்ளது என்று பேசியதோடு, படம் வெற்றிபெற வாழ்த்தினார்.

மேலும் இவ்விழாவில் இயக்குனர்கள் வி.சி. குகநாதன், சமுத்திரக்கனி, சுப்ரமணியசிவா மற்றும் திரையுலக பிரமுகர்கள் கலந்துகொண்டனர். விழாவுக்கு வந்திருந்த அனைவரையும் இப்படத்தின் தயாரிப்பாளர் கே.பி. இந்திரகணேசன் வரவேற்றார்.

படத்தின் தலைப்பு 'காதல் ஓசை' என்பதால் காதலிக்கும் இளசுகளை இந்தப் பாடல் இசை ஈர்க்கும் என்பதில் சந்தேகமில்லை.

Share this Story:

Follow Webdunia tamil