கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறும் தகுதியுடன் தமிழில் ஒரு படம் உருவாகிறது. படத்தில் பெயர் 'கடைசி நிமிடம்'.
ஒரு ராணுவ அதிகாரி தனது குழந்தையைப் பார்க்க ஒரேயொரு நபர் பயணம் செய்யும் விமானத்தில் செல்கிறார். நடுவானில் பழுதடையும் விமானம் அடர்ந்த காட்டில் கட்டுப்பாட்டை இழந்து விழுகிறது. உயிரோடு தப்பிக்கும் ராணுவ அதிகாரி அடர்ந்த காட்டுக்குள்ளிருந்து எப்படி வெளியேறுகிறார் என்பது கதை.
ராணுவ அதிகாரியாக புதுமுகம் ஸ்ரீதர் நடிக்கிறார். சரியாகச் சொன்னால் அவர் மட்டுமே படத்தில் நடிக்கிறார். இதுவரை ஒரேயொரு நபர் மட்டும் நடித்த ஃபியூச்சர் ஃபிலிம் வெளிவந்ததில்லையாம். அந்த வகையில் கடைசி நிமிடம் ஓர் உலக சாதனை.
காட்டுக்குள் சிக்கிக் கொள்ளும் ராணுவ அதிகாரியை அபூர்வ சக்தி ஒன்று ஆட்டிப் படைப்பதாக திரைக்கதையை சுவாரஸியப்படுத்தியுள்ளனர். சின்னா படத்தை இயக்குகிறார்.