படம் தயாரிக்கிறார் செல்வராகவன். இதற்கென யுவன், அர்விந்த் கிருஷ்ணாவுடன் தொடங்கிய வெள்ளை யானைகள் பட நிறுவனம், மூவரின் நட்பும் சிதறு தேங்காய் ஆனதோடு அதுவும் சுக்கு நூறானது.
இது புதிய பட நிறுவனம். பெயர் 00 ஃபிலிம்ஸ். யு டிவியுடன் செல்வராகவனின் நிறுவனம் கூட்டாக மூன்று படங்களைத் தயாரிக்கிறது.
செல்வராகவனே மூன்று படங்களையும் தயாரிக்கிறார் என்று வெளியான செய்தி தவறு. வேறு இயக்குநர்களே தயாரிக்கிறார்கள். தயாரிப்பு மட்டும் செல்வா.
மூன்றில் ஒன்றில் தனுஷ் ஹீரோ. மற்ற இருவருக்கான வேட்டை தொடர்ந்து கொண்டிருக்கிறது. செல்வாவின் தயாரிப்பு நிறுவனத்தின் பார்ட்னர் அவரது மனைவி சோனியா அகர்வால்.
உடையாத கூட்டணி!