ஆட்டம் அதிகமாகி பத்திரிகைகளில் பக்கம் பக்கமாக செய்தி வரும்போது நடிகர்கள் திடீர் முடிவு ஒன்று எடுப்பார்கள். இனி பார்ட்டிக்கு போக மாட்டேன், பத்திரிகைகளுக்கு பேட்டி தர மாட்டேன்.
சிம்பு இந்த மூன்று மாட்டேன்களையும் சில காலமாக கடை பிடிக்கிறார். அவர் வழியில் இதோ லட்சுமிராய்.
இந்த பெங்கால் அழகிதான் பத்திரிகைகளின் அட்சயபாத்திரம். பிரகாஷ்ராஜ் தொடங்கி டோனி வரை ராயை இணைத்து கிசுகிசு எழுதிவிட்டனர். சே... இத்தனை பேரா என்று ராய்க்கே வெறுப்பு. பார்ட்டிக்கு போனால் தானே இந்த பத்திரிகை வம்பு என்று, பார்ட்டிகளுக்கே சுய தடை விதித்திருக்கிறார். சிம்பு அளவுக்கு சின்சியர் தடை அல்ல. முக்கியமான பார்ட்டிகளுக்கு தடை விலக்கு உண்டாம்.
பார்ப்போம், லட்சுமிராயின் முடிவுக்கு பலன் கிடைக்கிறதா என்று!