ஜீவா நடித்த தித்திக்குதே படத்தை இயக்கியவர் பிருந்தா சாரதி. லிங்குசாமியின் நண்பர். அவரது படத்துக்கு பிருந்தா சாரதியே வசனம் எழுதினார்.
பிறகு நண்பர்களுக்குள் விரிசல் விழ, சண்டக்கோழி, பீமா படங்களுக்கு வசனம் எழுதும் பொறுப்பை ஏற்றார் எஸ். ராமகிருஷ்ணன்.
லிங்குசாமி கார்த்தியை வைத்து இயக்கும் படத்திற்கு மீண்டும் பிருந்தா சாரதியே வசனம் எழுதுகிறார். இயக்கம் அவ்வளவுதானா என்று சுற்றியிருந்தவர்கள் துக்கம் விசாரித்த நேரம், அதிர்ஷ்டம் அபிபுல்லா சாலையிலிருந்து சரதியை அழைத்தது.
மீண்டும் சூப்பர்குட் ஃபிலிம்சுக்காக படம் பண்ணுகிறார் பிருந்தா சரதி. ஜீவா ஹீரோ. முக்கியமான வேடத்தில் சேரன்.
இயக்கும் வாய்ப்பு கிடைத்ததால் வசன வாய்ப்புகளை உதறி வருகிறார் பிருந்தா சாரதி.