தெனாவட்டு பெயர் பலாப்பழம் மாதிரி கரடுமுரடாக தெரிந்தாலும், கனிவான சில விஷயங்களை படத்தில் வைத்திருக்கிறார் இயக்குனர் கதிர். ரேவதி எனும் திருநங்கையை திரும்பிப் பார்க்க வைக்கும் நல்ல வேடத்தில் அறிமுகப்படுத்தியிருப்பது ஒன்று. இன்னொன்று சரண்யா.
இதுவரை அழுதுவடியும் அம்மா வேடத்தில் மட்டுமே சரண்யாவை பார்த்திருக்கிறோம். அதிலும் தவமாய் தவமிருந்து அவரது ட்ரேட் மார்க்காகவே ஆகிவிட்டது. கிளிசரின் இல்லாமல் சரண்யா கேரக்டரை யோசிக்கவே முடியாத நிலையில், அதனை முதன் முறையாக மீறியிருக்கிறார் கதிர்.
தெனாவட்டில் கரிசல் காட்டு முரட்டு அம்மாவாக நடித்துள்ளார் சரண்யா. கிளிசரினுக்கு அவசியமில்லாத, துணிச்சலான வேடம். படம் வெளிவந்தால் சரண்யாவின் அழுமூஞ்சி அம்மா இமேஜ் மாறிவிடுமாம். மாறவேண்டும், அதுதானே நமக்குத் தேவை!