Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முதலில் ஆன்மிகம் பிறகு கம்யூனிசம்!

முதலில் ஆன்மிகம் பிறகு கம்யூனிசம்!
, வெள்ளி, 23 மே 2008 (19:36 IST)
முப்பது வயசு வரை கம்யூனிசம். ஐம்பதுக்கு மேல் ஆன்மிகம். மனித வாழ்க்கையில் இப்படிதான் நடக்கும். பி.சி. அன்பழகன் கதை வேறு.

நாடார் இன மக்களின் விடுதலைக்காக பாடுபட்டவர் முத்துக்குட்டி சாமிகள். நாடார்கள் இன்று அவரை அவதாரமாகக் கருதி கடவுளாக கொண்டாடுகிறார்கள். அவரைப் பின்பற்றுகிறவர்களின் மதம், அய்யா வழி!

இந்தப் பெயரில் முத்துக்குட்டி சாமியின் வாழ்க்கையை திரைப்படமாக எடுத்து வருகிறார் பி.சி. அன்பழகன். படம் முடியும் நிலையில் உள்ளது.

இதையடுத்து கம்யூனிஸ்ட் தலைவர் ஜீவானந்தத்தின் வாழ்க்கையை தோழர் ஜீவா என்ற பெயரில் திரைப்படமாக எடுக்கிறார். சேவையே மூச்சாக எளிமையே வாழ்க்கையாக கொண்டிருந்தவர் ஜீவா. கம்பன் மீது கட்டுக்கடங்கா காதல் கொண்டிருந்தவர். உள்ளது உள்ளபடி எடுத்தால் உலகத்தரத்தில் ஒரு படம் கிடைக்கும். பி.சி. அன்பழகன் கையில்தான் எல்லாம் இருக்கு.

Share this Story:

Follow Webdunia tamil