திருநங்கைகளை (அரவாணிகள்) உண்மையாக சித்தரித்த தமிழ்ப்படம் ஒன்றுகூட இல்லை. பாலியல் சார்ந்த கேலிச் சித்தரிப்பிற்கு மட்டுமே அவர்கள் பயன்பட்டிருக்கிறார்கள்.
பம்பாய் போன்ற ஏதோ சில படங்கள் மட்டுமே விதிவிலக்கு.
தெனாவட்டு படத்தில் ரேவதி என்கிற திருநங்கையை அறிமுகப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் வி.வி.கதிர். மற்ற திரைப்படங்களைப் போல கூட்டத்தோடு கும்மாளமிடுபவராக ரேவதியைச் சித்தரிக்காதது ஆறுதல்.
தேர்ந்த நடிகையைப் போல திறைமையுடனும் ஈடுபாட்டுடனும் நடித்தார் என்று ரேவதியைப் பாராட்டுகிறார் கதிர். படம் வெளிவந்தால் திருநங்கைகளுக்கெல்லாம் ரேவதி பெருமை சேர்ப்பார் என்று நம்பிக்கையும் தெரிவித்தார்.
திருநங்கைகளின் உண்மையான முகத்தை வெளிப்படுத்துவதில் தெனாவட்டு தொடக்கப் புள்ளியாக அமையட்டும்.