எஸ்.வி. சேகரா கொக்கா? எடுத்த சபதம் முடிக்கும் வரை இந்த காமெடி கிங்கிற்கு உறக்கமில்லை.
மகனை பெரிய நடிகராக்குவதே எஸ்.வி. சேகரின் சபதம். நடக்கிற காரியமா இது என்று நமட்டு சிரிப்பு சிரிப்பவர்களை ஒதுக்கிவிட்டு, மகன் அஸ்வின் சேகர் நடிக்கும் நினைவில் நின்றவள் படத்தில் கவனம் பதித்துள்ளார்.
கேளடி கண்மணி முதல் பிப்ரவரி 14 வரை பல படங்களில் பணிபுரிந்த அகஸ்திய பாரதி இயக்கம். புகைப்படங்களில் அஸ்வின் சேகருடன் இருவர் சிரிக்கிறார்கள். ஒருவர் நமக்குத் தெரிந்த கீர்த்தி சாவ்லா. இன்னொருவர் பெங்களூருக்கு மட்டும் தெரிந்த பரதநாட்டிய மேதை காயத்ரி வெங்கடகிரி. (பதற்றம் வேண்டாம், வெங்கடகிரி அப்பா பெயர்)
இரண்டு நாயகிகள் என்பதால் அவசரப்பட்டு முக்கோணக் காதல் கதையா என்று எண்ண வேண்டாம். முற்றிலும் வித்தியாசமான காதலாம்.
எஸ்.வி. சேகர் சின்ன வேடம் ஒன்றில் நடிப்பதுடன், படத்தின் கிரியேடிவ் எடிட்டராகவும் இருக்கிறார்.
அப்போ கேப்டன் ஆஃப் தி ஷிப் யார்?