இளையராஜா, எம்.எஸ்.வி. பாடல்களை ரீ-மிக்ஸ் என்ற பெயரில் பதம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இப்போது ரீ-மிக்ஸ் பிரியர்கள் ஏ.ஆர். ரஹ்மான் வரை வந்துவிட்டார்கள்.
'தீயவன்' படத்தில் ஏ.ஆர். காதலன் படத்தில் இசையமைத்த, காதலிக்கும் பெண்ணின் கைகள் தொட்டு நீட்டினால் பாடலை ரீ-மிக்ஸ் செய்திருக்கிறார்கள்.
குண்டு எஸ்.பி.பி., ஒல்லி பிரபுதேவா, கறுப்பு வடிவேலு, சிவப்பு நக்மா என அந்தப் பாடலே ஒரு காக்டெய்ல். பாடல் வரியும், குரலும், இசையும் ஏதோ ரீ-மிக்ஸ் போலவே இருக்கும் அதனை தீயவனில் ரீ-மிக்ஸ் செய்திருக்கிறார்களாம்.
இதைவிட அதிர்ச்சி, இந்த ரீ-மிக்ஸில் ஆடியிருப்பவர்கள் எம்.எஸ். பாஸ்கர், குண்டு ஆர்த்தி.
உண்மையிலேயே ரொம்ப தீயவன்கள்தான்!