அரசியல் பஞ்ச் இல்லாமல் விஜயகாந்த் படமா? அரசாங்கம் படம் பார்த்தவர்கள் ஆச்சர்யத்துடன் பாராட்டுகிறார்கள். படம் நன்றாக இருந்தாலும் கேப்டனின் தொண்டரணிக்கு அரசியல் பஞ்ச் இல்லாதது ஒரு குறை.
இதற்கும் சேர்த்து எங்கள் ஆசானில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, உதிரிக்கட்சி என எல்லாக் கட்சிகளையும் சகட்டுமேனிக்குக் காய்ச்சி எடுக்கிறாராம். பன்ச் எழுதவே ஒரு டீம் பரபரவென வேலை செய்வதாகக் கேள்வி.
படத்தில் எந்தளவு அரசியல் என்றால், அரசாங்கத்தில் அவிழ்த்துப் போட்டு நடித்த ஷெரில் பிரிண்டோவை இழுத்துப் போர்த்து வைத்து நகராட்சித் தலைவியாக நடிக்க வைத்திருக்கிறார்கள்.
நாயகியே நகராட்சித் தலைவி என்றால் நாயகன்? நாட்டை ஆளுற தலைவர்தான்.... உற்சாகமாக விசிலடிக்கிறது தொண்டரணி!