ஆயிரத்தில் ஒருவன் படத்தில் இருந்து யுவன் சங்கர் ராஜாவை செல்வராகவன் நீக்கியது தெரியும். யுவன் இசையமைத்த 2 பாடல்களைப் பயன்படுத்தாமல் படத்திலிருந்தே தூக்கியதும் தெரியும். தெரியாதது யுவன் செல்வராகவன் மீது கொடுத்திருக்கும் புகார்.
ஆயிரத்தில் ஒருவன் மற்றும் யாரடி நீ மோகினி படங்களுக்கு இசையமைத்ததற்கான பணம் இன்னும் யுவனிற்குச் செட்டில் செய்யப்படவில்லையாம். தவிர, நட்பின் அடிப்படையில் கொடுத்த கடனும் திரும்பி வரவில்லையாம்.
இதுபற்றி ஃபிலிம் சேம்பரிலும், இயக்குநர்கள் சங்கத்திலும் செல்வராகவன் மீது யுவன் புகார் தந்திருப்பதாக கூறுகிறார்கள். பெரிய இடத்துச் சமாச்சாரம் என்பதால் சைலன்டாக பஞ்சாயத்து நடந்து வருகிறது.