தசாவதாரம் படத்திற்கு மேலுமொரு சிக்கல். தினமொரு தசாவதாரம் சிக்கலை கேட்கும் காதுகளுக்கு இது காதில் தார் உருக்கி ஊற்றுவதுபோல் இருக்கும். என்ன செய்து... நீட்டி முழக்காமல் விஷயத்திற்கு வருவோம்.
தசாவதாரத்தை தயாரித்திருக்கும் ஆஸ்கர் ஃபிலிம்சின் லோகோ, ஆஸ்கர் விருது கமிட்டி வடிவமைத்துள்ள ஆஸ்கர் விருது போன்றே இருக்கும். மாநில அளவில் பேசப்படும் படத்தை தயாரித்தது வரை பிரச்சனையில்லை. தசாவதாரம் சர்வதேச அளவில் பேசப்படும் படம். தவிர, அமெரிக்க தயாரிப்பு நிறுவனங்கள் தமிழகத்திற்குள்ளும் புகுந்துள்ளன.
நாங்கள் வடிவமைத்த விருது சிற்பத்தை எப்படி தமிழ் தயாரிப்பு நிறுவனமொன்று தனது லோகோவாக பயன்படுத்தலாம் என புகைச்சல் கிளம்பியுள்ளதாம். ஆஸ்கர் ஃபிலிம்ஸுக்கு விளக்கம் கேட்டு விரைவில் கடிதம் வர உள்ளதாகவும் கூறப்படுகிறது.
வந்தால், லோகோவை மாற்றிவிட்டே தசாவதாரத்தை ரிலீஸ் செய்ய வேண்டிவரும்.