Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இயக்குனர்கள் சங்கம் - குழம்பிய குட்டை!

Advertiesment
இயக்குனர்கள் சங்கம் - குழம்பிய குட்டை!
, செவ்வாய், 13 மே 2008 (18:39 IST)
சங்கத்திற்குள் இருந்த புகைச்சலும், பொறாமையும் தேர்தல் நேரத்தில் வெளிவந்திருக்கிறது. இதனை எப்படி மூடி மறைப்பது என தெரியாமல் திகைக்கிறார்கள் சீனியர்கள். இந்நிலையில் சங்கத்துக்கு எப்போது தேர்தல் என்பதே அனைவர் முன் இருக்கும் கேள்வி.

இயக்குனர் வேல் முருகனை நடிகர் ஜே.கே. ரித்தீஷின் உதவியாளர் ராதாகிருஷ்ணன் தாக்கியதற்கு, இயக்குனர்கள் முன்னிலையில் பாரதிராஜாவிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டுக்கொண்டார் ரித்தீஷ். இவரது நாயகன் படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் பாவா. அடுத்து ரித்தீஷ் நடிக்கும் படத்தை இவர் இயக்க உள்ளார்.

இயக்குனர்கள் சங்கத்தில் உறுப்பினராக இல்லாத பாவா, நாளைய இயக்குனர்கள் அணி என்ற மூன்றாவது அணியை அமைத்திருக்கும் உதவி இயக்குனர்களுக்கு ஆதரவு தந்து தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். உறுப்பினராக இல்லாதவர்கள் தேர்தலில் ஊடுருவுவதாக இயக்குனர் வி. சேகர் ஏற்கனவே காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில், அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது நாளைய இயக்குனர்கள் அணி. உறுப்பினராக இல்லாத சுமார் 600 நபர்களை வைத¨து இயக்குனர்கள் தேர்தல் வேலை பார்ப்பதாக அதில் குற்றம் சாற்றியுள்ளனர். மேலும், உதவி இயக்குனர்களை தேர்தலில் போட்டியிடாமல் செய்வதற்காக, அவர்களை அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்க இயக்குனர்கள் முயன்று வருவதாக பகிரங்கமாக குற்றம் சாற்றியுள்ளனர்.

நேற்று மாலை ஹோபா திருமண மண்டபத்தில் இயக்குனர்கள், உதவி இயக்குனர்களுக்கு இடையே காவல்துறை முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையும் ஒரு முடிவை எட்டவில்லை. பரஸ்பரம் ஒருமையில் பேசி எரிகிற தீயில் பெட்ரோல் ஊற்றியதோடு சரி.

தேர்தல் எப்போது? யார் யார் போட்டியிடுகிறார்கள்? உதவி இயக்குனர்களின் கதி என்ன?

அடுக்கடுக்கான பதில்களுக்கு ஒருவேளை இன்று பதில் கிடைக்கலாம்.

Share this Story:

Follow Webdunia tamil