ஸ்ரேயா சிவாஜி பட விழாவிற்கு அறைகுறை ஆடையில் வந்த விடயம் தொடர்பான சர்ச்சைகள் இப்போதுதான் அடங்கியது. அடுத்த பிரச்சனையை ஆரம்பித்து வைத்து விட்டார் மல்லிகா ஷெராவத்.
தசாவதாரம் மேடையில், முதல்வர் முன்னிலையில் நடந்த விழாவில் அரைகுறை ஆடையில் குட்டைப் பாவாடையில் அமர்ந்திருந்தார்.
அரைகுறையாய் கால்மேல் கால்போட்டு அமர்ந்திருந்த இந்தச் செயல் தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம் போன்றவற்றைப் புண்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சியின் தென் சென்னை மாவட்ட அமைப்புச் செயலர் எஸ்.ஆர்.கனிராஜன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
''அல்லாருக்கும் வணக்கம்'', ''நான் சென்னை புடிக்கும்'' என்றெல்லாம் மேடையில் செந்தமிழ் பேசி நெஞ்சையள்ளும் அம்மணிகள் அப்படியே கொஞ்சம் நடை உடை பாவனைகளையும் மாற்றித் தொலைந்தால்தான் என்ன?