படிப்பறிவில்லாத ஒரு இளைஞன் உழைப்பின் மூலம் வாழ்க்கையில் எப்படி முன்னேறுகிறான். அதற்கு அவன் படும் கஷ்டங்கள் என்ன. அதை எப்படி எதிர்கொண்டு வெற்றிபெறுகிறான் என்பதுதான் படிக்காதவனின் கதையாம்.
விஜய வாஹினி தயாரிப்பில் இயக்குநர் சூரஜ் இயக்கும் இப்படம் இளைஞர்களுக்கு நல்ல சேதி சொல்லும் படம். தனுஷிற்கு நாயகியாக ஜோடி சேர்பவர் தமன்னா.
படிக்காதவன் டைட்டில் ரஜினியின் உதவியுடன் ஈஸ்வரி ஃபிலிம்ஸ் வீராச்சாமியிடம் இருந்து வாங்கப்பட்டுள்ளது. பழைய படிக்காதவனை மிஞ்சுமா என்று யாராவது தனுஷிடம் கேட்டால், "மிஞ்சுரதெல்லாம் வேண்டாம், அந்தப் படத்தலைப்பைக் கெடுத்திடாத மாதிரி கவனமாயிருக்கேன் என்கிறாராம் தன்னடக்கத்தோடு" தனுஷ்.