எங்கள் ஆசான் படம் தொடங்கியதன் காரணமாக விஜயகாந்த் பொள்ளாச்சியில் முகாமிட்டுள்ளார். அரசாங்கம் வெளிவரும் நாளைத் தொண்டர்கள் ஒருபறம் எதிர்பார்த்திருக்க எங்கள் ஆசான் சூட்டிங்கில் வேகம் காட்டுகிறார் விஜயகாந்த்.
நிறைய வாய்ப்புகள் வந்தாலும், தனக்குத் தேர்ந்த கதையம்சம் உள்ள படங்களில் மட்டும் நடிக்க உத்தேசித்துள்ளார். எங்கள் ஆசானும் அப்படி ஒரு கதைதான் என்பதைச் சொல்ல வேண்டிய அவசியமில்லை.
இதில் ஸ்ரீதேவிகா விஜயகாந்திற்கு ஜோடியாக நடிப்பதாக இருந்தது. அந்த வாய்ப்பினை அரசாங்கம் ஜோடி நவ்னீத் கவுர் தட்டிச் சென்று விட்டார். இரண்டாவது கதாநாயகியாக நடிக்கவிருப்பது கலாபக்காதலன் அக்ஷயாவாம். அரசியல் நெடிக்கு ஆசானில் பஞ்சமிருக்காது என்றும் பேசப்படுகிறது.