இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கான நட்சத்திரத் தூதர் பொறுப்பில் இருந்து நடிகை நயன்தாரா நீக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் எல்லா போட்டிகளிலும் நடிகை நயன்தாராவினால் பங்கேற்க இயலாததால் தூதுர் பொறுப்பிலிருந்து அவர் நீக்கப்பட்டுள்ளதாகவும், அணியின் தூதராக நடிகர் விஜய் மட்டுமே நீடிப்பார் என்று கூறப்பட்டுள்ளது.
தனது கால்ஷீட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக நாள் ஒதுக்க முடியாத காரணத்தால்தான், நட்சத்திரத் தூதராக நடிக்க முடியாத நிலை நயன்தாராவிற்கு ஏற்பட்டுள்ளது.
இனி, சென்னை அணி பங்கேற்கும் போட்டிகளில் எல்லாம் நடிகர் விஜய் பங்கேற்று வீரர்களையும் ரசிகர்களையும் உற்சாகப்படுத்த உள்ளார்.
கடந்த புதனன்று சென்னையில் நடந்த கிரிக்கெட் போட்டியின் போது நடிகர் விஜயின் பங்கேற்பிற்கு அமோக வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.