ஐ.பி.எல். இருபதுக்கு20 கிரிக்கெட் திருவிழா படுஜோராக நடந்து வருகிறது. இன்று சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சச்சின் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதப்போகிறது.
விறுவிறுப்பாக இன்று மாலை தொடங்கப் போகும் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் விளம்பரத் தூதராக நடிகர் விஜய், நடிகை நயன்தாரா இருவரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதன் காரணமாக டோனியை நேரில் சந்தித்தார் விஜய். விஜய் பற்றிய பல தகவல்களையும், படங்களின் பாடல்களை பாடிக்காட்டியும் அசந்திவிட்டார் டோனி என்று பெருமையுடன் கூறுகிறார் விஜய். இவ்வளவு பெரிய வீரர் தன்னைப் பற்றித் தெரிந்துகொண்டது ஆச்சரியமான விஷயம் என்றும் நண்பர்களிடம் தெரிவித்தார்.
மேலும், சென்னையில் போட்டி ஏழு நாட்களும் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் ஸ்டேடியத்தில் இருக்க வேண்டும் என்றாலும், படப்பிடிப்பு குறித்து நேரம் கிடைக்கும் போதெல்லாம் கலந்துகொள்வேன் என்றார். இதற்கிடையே அணியின் விளம்பர நாயகியான நயன்தாரா உடல்நிலை சரியில்லாத காரணத்தால் 'குசேலன்' படத்தில் நடனமாடிக் கொண்டிருந்தபோது மயங்கி விழுந்துவிட்டதால் அவரும் இந்த போட்டிகளில் கலந்துகொள்வாரா என்பது சந்தேகமே.