இன்னும் போர்த்திக்கொண்டு நடித்தால் தமிழ் சினிமாவில் நிலைக்க முடியாது என்பதை புரிந்துகொண்டு கொஞ்சம் கொஞ்சம் கவர்ச்சி காட்டத் துணிந்துவிட்டனர்.
சில நடிகைகள் அப்படி கிளாமராக நடித்தால் தப்பில்லை என்று அறிக்கையே வெளியிட்டனர்.
'பருத்தி வீரன்' படத்தில் அழகாக தாவணி கட்டிக்கொண்டு அசல் கிராமத்துப் பெண்ணாக வந்த ப்ரியாமணி, ஜீவனுடன் சேர்த்து நடித்த தோட்டா படத்தில் அரைகுறை ஆடையுடன் ஆட்டம் போட்டார்.
அதேபோல், இதற்குமுன் நடித்த எல்லாப் படங்களிலும் குடும்பப் பாங்கான வேடத்தில் நடித்த சினேகா ஒரு படத்தில் தொப்புள் தெரிய சேலை கட்டவுள்ளார்.
அந்த வரிசையில் சித்திரம் பேசுதடி பாவனா, ஆட்டோகிராஃப் கோபிகா என பலரும் கிளாமர் காட்டி நடிக்கத் திட்டமிட்டுள்ளனர். இதனால் கிளாமரிலேயே கொடிகட்டி பறந்துகொண்டிருந்த சில இளம் நடிகைகள் அடுத்த திட்டம் பற்றி ஆலோசித்து வருகின்றனர்.