ஆரம்பத்தில் முகம் சுழித்தாலும் பின்னர் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட படம் 'மிருகம்'. அதன் தயாரிப்பு நிறுவனம் மீண்டும் கதை கேட்டு வருகிறது. வித்தியாசமான கதையாக இருந்தால் மட்டும் போதும். மற்றபடி நடிகர்- நடிகை, மற்ற டெக்னீஸியன்கள் பற்றிக் கவலைப்படுவதில்லை.
இயக்குநர் விருப்பப்படி யாரை வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம். ஆனால் ரூ.40 லட்சத்திற்குள் எடுத்துக் கொடுக்க வேண்டும் என்பது மட்டும்தான் கண்டிஷன்.
அதற்கு ஒப்புக்கொண்டு ஒரு படத்தை இயக்க உள்ளார் குமார். இவர் 'தாலாட்டு', 'பரிவட்டம்' ஆகிய படங்களை இயக்கிய டி.கே.ராஜேந்திரன் மற்றும் இயக்குநர் விக்ரமனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர்.
பட பட்ஜெட் ரூ.40 லட்சம் என்பதால் ஒரே ஒரு உதவி இயக்குநரை மட்டும் வைத்துக்கொண்டு டிஸ்கஷன் செய்து வருகிறார் இயக்குநர் குமார்.