'கவிதை' ஐந்து ஆண்டுகளுக்கு முன் வெளியான படம். 'தங்கம்' சத்யராஜ் நடித்து சமீபத்தில் வெளியானது. இந்த இரண்டு படங்களின் இயக்குனர் ஜி. கிச்சா. தங்கம் இவரது சொந்த தயாரிப்பு.
இந்த இரண்டு படங்களுமே கிச்சாவுக்கு கைகொடுக்கவில்லை. எனவே கரெண்ட்டில் உள்ள ஒரு ஹீரோவின் கால்ஷீட் கிடைத்தால்தான் சினிமாவில் நிலைக்க முடியும் என்ற நிலையில், தன் பழைய நண்பரும் இன்றைய பிஸி ஹீரோவுமான சுந்தர் சி-யை சந்திக்க அதிர்ஷ்டம் அடித்தது.
சேரன்-சினேகாவை ¨த்து எடுக்கப்பட்ட படம் 'பிரிவோம் சந்திப்போம்'. இதன் தயாரிப்பு நிறுவனம் ஞானம் ஃபிலிம்ஸ். அவர்களிடம் கால்ஷீட் தருவதாகச் சொல்லி சுந்தர் சி, கிச்சாவை அனுப்ப, கதை ஓகே ஆனது.
டி. இமான் இசை என்பது மட்டும்தான் தற்போது முடிவாகியுள்ள விஷயம். மற்ற தொழில்நுட்ப கலைஞர்களை தேர்வு செய்து வருகிறார் கிச்சா. தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என்பது போல... நண்பன் உடையான் படத்துக்கு அஞ்சான் என்பது போலாகிவிட்டது.