Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ராடான் கம்பெனியில் ஷங்கரின் உதவியாளர்!

Advertiesment
ராடான் கம்பெனியில் ஷங்கரின் உதவியாளர்!
, திங்கள், 21 ஏப்ரல் 2008 (18:41 IST)
பிரபல நடிகை ராதிகாவின் ராடான் நிறுவனமும், சன் டி.வி.யும் இணைந்து தமிழ்ப் படங்களை தயாரித்து வெளியிட முடிவு செய்துள்ளது.

இதற்கான முழு பொறுப்பையும் இயக்குனர், தயாரிப்பாளர் கேயார் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. கதை கேட்பது மற்றும் சினிமா தயாரிப்பிற்கான பணிக்கான கேயாருக்கு தனி அலுவலகம் வழங்கப்பட்டது. அதன்படி, பல்வேறு உதவி இயக்குனர்களும், இயக்குனர்களும் கதை சொல்லி வருகின்றனர்.

அந்த வகையில் இயக்குனர் ஷங்கர் அவர்களிடம் 'அந்நியன்', 'சிவாஜி' ஆகிய திரைப்படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றிய ஆடம்தாஸ், காதல், ஆக்சன் கலந்த ஒரு கதையை சொல்ல உடனே ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதற்கான ஒப்பந்தமும் போடப்பட்டது.

ஹீரோவாக பரத் அல்லது விஷால் நடித்தால் கதைக்கு ஏற்றதுபோல் இருக்குமென்று இயக்குனர் சொல்ல, கால்ஷீட்டுக்காக இரண்டு ஹீரோக்களுக்கு வலை வீசி அலைந்து வருகிறார் ஆடம்.

விஷால் மிகவும் பிஸியாக இருப்பதால் பரத் ஒப்பந்தம் செய்யப்பட்டு மே முதல் அல்லது கடை வாரம் படப்பிடிப்பிற்கு கிளம்ப உள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil